ஜனாதிபதி சார்ள் து கோல் பதவி விலகல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதி சார்ள் து கோல் பதவி விலகல்!!

இன்றைய தினமான 28ம் ஏப்பரல்மாதம் திகதி 1969 ஆம் ஆண்டு, பிரான்சின் விடுதலையில் பெரும் பங்காற்றிய, ஜனாதிபதி சார்ள் து கோல் (Charles de Gaulle) பதவி விலகிய தினமாகும். 1968 ஆம் ஆண்டு நடந்த பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களின் பின்னராக, அப்போது ஜனாதிபதியாவிருந்த சார்ள் து கோல் ஒரு மக்கள் வாக்கடுப்பை நடாத்தியிருந்தார்.
 
 
இதில் 52% பிரெஞ்சு மக்கள் சார்ள் து கோலிற்கு எதிரான வாக்கினைச் செலுத்தியமையால், மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து பதவி விலகியிருந்தார்.
 
 
21ம் திகதி டிசம்பர் மாதம் 1958 இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகிய சார்ள் து கோல் அவர்கள், மீண்டும் 19ம் திகதி டிசம்பர் மாதம் 1965 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தேர்தலிலும் மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னரே மக்களின் எதிர்ப்பை மதித்து, 28ம் ஏப்பரல்மாதம் திகதி 1969 ஆம் ஆண்டு பதவி விலகியிருந்தார்.
 

மூலக்கதை