நெருங்கும் மூன்றாம் உலகப்போர்! போட்டி போடு உலக நாடுகள் - பீதியில் மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
நெருங்கும் மூன்றாம் உலகப்போர்! போட்டி போடு உலக நாடுகள்  பீதியில் மக்கள்

 சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய 4 நாடுகளுக்கு மத்தியில் நிலவி வந்த பனிப்போர் தற்போது தீவிரமடைந்து மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
2011-ம் ஆண்டில் வட கொரியாவின் அதிபராக கிம் யோங்-அன் பதவியேற்றது முதல் ஒவ்வொரு நாளும் அந்நாட்டின் நடவடிக்கையை அமெரிக்காவும், ஐ.நா சபையும் கூர்ந்து கவனித்து வருகிறது.
 
சர்வதேச வல்லரசு நாடுகள் தன்னிடம் வாலாட்ட விடக்கூடாது என்ற எண்ணத்தில் வட கொரியா நிகழ்த்தி வரும் அன்றாட செயல்கள் தான் தற்போது மூன்றாம் உலகப்போருக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது.
 
மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக ஏற்படுமா?
 
உலகப்போர் ஏற்படப்போகிறது என்பதை துள்ளியமாக முன் கூட்டியே கணிக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் மூன்றாம் உலகப்போரை தூண்டியவாரு அமைந்து வருகிறது என்பதை மறுக்க இயலாது.
 
ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா இதுவரை இரண்டு அணுகுண்டு சோதனைகளையும், 24 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளையும் செய்து உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
வட கொரியாவை ஒடுக்க அமெரிக்கா அண்மையில் போர்க்கப்பலை கொரியா தீபகற்பத்திற்கு அனுப்பியது.
 
இதனை வட கொரியாவும், ரஷ்யாவும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதுமட்டுமில்லாமல், தனது ஆதரவு நாடான சிரியாவில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியதும் ரஷ்யாவை மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்நிலையில் தென் கொரியாவில் ராணுவ தளவாடங்களை நிலை நிறுத்தியுள்ள அமெரிக்கா அங்கு தினமும் ராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டு வருவது சீனாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
ஆனால், அமெரிக்காவின் ஒரு இலக்காக இருப்பது வட கொரியா மட்டுமே. போர்க்கப்பல் மற்றும் 100 போர் விமானங்களை அனுப்பி வட கொரியாவை மறைமுகமாக மிரட்டி பார்த்த அமெரிக்கா இறுதியில் ஏமாற்றத்தையே அடைந்தது.
 
‘வட கொரியாவில் சிறிய தாக்குதல் நடத்துவது போன்ற ஒரு துருப்பு கிடைத்தால் கூட அமெரிக்காவில் அணுகுண்டை வீசி நாசமாக்குவோம்’ என வட கொரியா அதிபர் துணிச்சலாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்காவை மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இதனை தொடர்ந்து வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.
 
இதனிடையில் ரஷ்யாவும் சீனாவும் இரு நாடுகளின் நடவடிக்கையை கூர்ந்து கவனித்து வருவதால், உலகளவில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் மத்தியில் ஸ்தரமற்ற தன்மை நிலவுவதால் மூன்றாம் உலகப்போர் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளது என சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 
மூன்றாம் உலகப்போர் எப்படி தொடங்கும்?
 
சிரியாவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரெதிர் துருவங்களில் நின்று தாக்குதலை கையாண்டு வருகின்றன.
 
இச்சூழலில் மூன்றாம் உலகப்போர் துவங்கினால் முதலில் ரஷ்யாவின் ஈடுப்பாடு தீவிரமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக, நட்பு நாடான சிரியாவில் இருந்துக்கொண்டு அதன் ஆதரவுடன் அமெரிக்காவை எதிர்த்து யுத்தத்தில் பங்கேற்கலாம்.
 
ரஷ்யா, வட கொரியா, சீனா என அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிராக களம் இறங்கினால் இது அமெரிக்காவை பெருமளவில் பாதிக்கும்.
 
அமெரிக்காவின் நட்பு நாடாக திகழும் பிரித்தானிய உடனடியாக அமெரிக்காவிற்கு ஆதரவாக யுத்தத்தில் பங்கேற்கும் சூழல் நிலவவில்லை. ஏனெனில், யுத்தத்திற்கு தேவையான ராணுவ செலவுகளை மேற்கொள்ள தற்போது பிரித்தானியாவின் கஜானா நிரம்பி வழியவில்லை.
 
இச்சூழலில் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 
யுத்தத்தில் தோல்வியே கிடைத்தாலும் கூட அமெரிக்காவை எதிர்த்து நிற்கவே வட கொரியா பெருதும் விரும்புகிறது. எனினும், மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அமெரிக்கா மற்றும் வட கொரியா தவிர பிற நாடுகள் மோசமான ஆயுதங்களை பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மூன்றாம் உலகப்போரில் வெற்றி பெறுவது யார்?
 
யுத்தம் ஏற்பட்டால் எந்த நாடு வெற்றி பெறும் என துல்லியமாக கணிப்பது கடினம். எனினும், தற்போதையை சூழலில் மிகவும் வலிமையான ராணுவ தளவாடங்களை கொண்டுள்ள அமெரிக்காவிற்கு வெற்றி வாய்ப்பு கூடுதலாகவே உள்ளது.
 
மேலும், உலக நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவிடம் மட்டுமே ஐந்தாம் தலைமுறை கண்டுபிடிப்பான 187 F-22 மற்றும் F-35 என்ற அதிநவீன போர் விமானங்கள் உள்ளன.
 
ரஷ்யாவும், சீனாவும் இதற்கான அடிப்படை தயாரிப்பில் தான் உள்ளன. வட கொரியாவிடம் இதுபோன்ற எவ்வித விமானங்களும் இல்லை.
 
போர் நீர்மூழ்கி கப்பல்களை ஒப்பிடுகையில் அமெரிக்காவிடம் ஏவுகணைகளை தாங்கிச்செல்லும் 14 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றில் 280 அணுகுண்டு ஏவுகணைகளை ஏற்றிச்செல்லலாம்.
 
ரஷ்யாவிடம் 60 நீர்மூழ்கி கப்பல்கல் இருந்தாலும் கூட அமெரிக்காவிடம் இருப்பது போன்ற அதிநவீன வசதிகள் இவற்றில் கிடையாது என்பது மிகவும் பலவீனமாகும்.
 
சீனாவிடம் 61 நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன. மேலும், அணுகுண்டு ஏவுகணைகளை அதிகளவில் ஏற்றிச்செல்லும் வசதிகள் கிடையாது.
 
எனவே, மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் வெற்றி வாய்ப்பு என்பது அமெரிக்காவிற்கு சாதகமாக உள்ளது என சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

மூலக்கதை