மாற்றுப்பணி கேட்டு காத்திருப்பு போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாற்றுப்பணி கேட்டு காத்திருப்பு போராட்டம்

நெல்லை: டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு பணியிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி  மாற்றுக்கடைகளில் பணி வழங்க வலியுறுத்தி வருகிற 8ம் தேதி டாஸ்மாக் மேலாளர்  அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறுமென தொழிற்சங்கங்கள் அறிவித்து  உள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500மீ சுற்றளவில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள், கடந்த 1ம் தேதி மூடப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் 128 கடைகளும், மாநகரில் சுமார் 25 கடைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் பெயரை பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி சாலைகள் என பெயர் மாற்றி மீண்டும் கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.

இதற்கும் தற்போது நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சாலைகளின் பெயரை மாற்றி டாஸ்மாக்கை திறக்கக் கூடாது.

3 மாதங்களுக்கு மாற்றுக்கடைகள் திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 3,312 கடைகள் மூடப்பட்டன. இதனால் 12 ஆயிரம் பேர் பணியின்றி பரிதவிக்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் மூடப்பட்ட 128 கடைகளில் பணியாற்றிய 728க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையின்றி உள்ளோம். தற்போது ஏரியா சூபர்வைசர்களிடம் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.

10 ஆயிரம் வரை பணம் கொடுத்தால் தற்போது செயல்படும் கடைகளில் கூடுதல் பணியமர்த்துகின்றனர்.

இதில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி வழங்குகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி மாற்றுக்கடைகளில் வேலை வழங்கவும், இல்லையெனில் மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு வருகிற 8ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன என்றனர்.

.

மூலக்கதை