உள்ளாட்சி தேர்தலுக்கான டெபாசிட் தொகையை திரும்ப வாங்க வேட்பாளர்கள் தயக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளாட்சி தேர்தலுக்கான டெபாசிட் தொகையை திரும்ப வாங்க வேட்பாளர்கள் தயக்கம்

திருவள்ளூர்: உயர்நீதிமன்றம் உத்தரவால் 2016 அக்டோபர் 17, 19ல் நடக்கயிருந்த உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டது. இத்தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 5,025 பதவியிடங்களுக்கு மொத்தம் 20,334 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தாங்கள் போட்டுயிடும் பதவிகளுக்கு ஏற்ப டெபாசிட் தொகை செலுத்தியிருந்தனர். தேர்தல் நிறுத்தப்பட்டதால் டெபாசிட் தொகை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கணக்கிலேயே உள்ளன.

விரும்பியவர்களுக்கு டெபாசிட் தொகையை ஏப்ரல் 30க்குள் திருப்பி கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் 100க்கும் குறைவானவர்களே டெபாசிட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பெரும்பாலானோர் டெபாசிட் திரும்ப பெற்றால் தங்களுக்கு சீட் கிடைக்காமல் போய்விடுமோ என சென்டிமெண்டாக கருதுகின்றனர்.

இதனால் அவர்கள் பணத்தை பெற முன்வரவில்லை. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறுகையில், “டெபாசிட் தொகை கேட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் விண்ணப்பித்தால் பணத்தை திருப்பி கொடுக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால்.

பெரும்பாலானோர் பணத்தை பெற தயக்கம் காட்டுகின்றனர்” என்றார்.

.

மூலக்கதை