அமெரிக்கர்களை கவரும் ஐஸ்கிரீம் மியூசியம்: குழந்தைகளோடு குதூகலிக்கும் பெரியவர்கள்

தினகரன்  தினகரன்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் மியூசியம் குழந்தைகளோடு பெரியவர்களையும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இந்த மியுசியத்தில் ஐஸ்கிரீமால் உருவாக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைப்பழங்கள் காண்பவர்களை சுண்டி இழுக்கின்றன. மக்களுக்கு வித்தியாசமான உலகத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இந்த மியூசியத்தை உருவாக்கியதாக இதன் அமைப்பாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். சுவரில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள மெகா சைஸ் ஐஸ்கிரீம்கள், பொம்மை போன்ற கோன் ஐஸ்கிரீம்கள், கொட்டி வைக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகள் போன்றவையும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அதேபோல மியூசியத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் ஆடிவருவது தங்களை உற்சாகப்படுத்துவதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை