அமெரிக்கா-வடகொரியா மோதலை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது: அதிபர் டொனால்ட் டிரம்ப்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: வடகொரியாவுடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையால் அமெரிக்கா-வடகொரியா நாடுகளுக்கு இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் தாக்குதலில் இருந்து ஜப்பான் மற்றும் தென்கொரியாவை பாதுகாக்க டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா என்னும் ஏவுகணை தடுப்பு கருவியை பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்க நிறுவியுள்ளது. இது சீனாவை பாதிப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் சீனா அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

மூலக்கதை