Bobigny - மருத்துவமனை வாசலில் துப்பாக்கிச்சூடு!

PARIS TAMIL  PARIS TAMIL
Bobigny  மருத்துவமனை வாசலில் துப்பாக்கிச்சூடு!

Bobigny இல் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குள் நுழைந்த இரு நபர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள். மருத்துவமனை வாசலில் இருந்த காவலாளிகளை தாக்க முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, Seine-Saint-Denis இன் Bobigny இல் உள்ள Avicenne எனும் மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, குறித்த மருத்துவமனை வாசலில் ஆக்கிரமிப்பு செய்ய முனைந்த இரு நபர்களை காவலாளிகள் வெகியே தள்கியதாகவும், அதன் பின்னர் குறித்த இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து  காவலாளிகளை குறித்த இரு நபர்களும் தாக்கியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டின் போது, மருத்துவமனைக்கு எதிரே இருந்த வெதுப்பகம் ஒன்றுக்குள் துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன் பின்னர் இரு நபர்களும் தப்பிச்சென்றுள்ளனர்.  தப்பிச்செல்வதற்கு முன்னர், காவலாளிகளை கடத்த முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை