லோக்பால் அமைக்காதது ஏன்? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

தினமலர்  தினமலர்
லோக்பால் அமைக்காதது ஏன்? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: 'லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது ஏற்கத்தக்க வகையில் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

மனு தாக்கல்:


லஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்காக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, 2013ல், பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டு, 2014ல் சட்ட வடிவம் பெற்றது. இதுவரை, லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை. லோக்பால் அமைப்பை விரைந்து அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிக்கல்:


லோக்பால் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெற வேண்டும் என, அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, 45 எம்.பி.,க்களே உள்ளனர். மொத்த எண்ணிக்கையான, 545 உறுப்பினர்களில், 10 சதவீத உறுப்பினர்களை, எந்தக் கட்சியும் பெறாததால், லோக்சபாவில், எதிர்க் கட்சித் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதனால், லோக்சபா அமைப்பிற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல் உள்ளதாக, மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை