இந்திய-வங்க எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்
இந்தியவங்க எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

கோல்கட்டா : இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதியில், ரகசிய சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சுரங்கப்பாதை:


மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது; இங்கு, வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள, வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில், 80 மீ., நீளமுள்ள ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு:


இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: வங்கதேச எல்லைப் பகுதியில், டெக்கான் தேயிலை தோட்டத்திற்கு அருகில், நீளமான சுரங்கப் பாதை தோண்டப்பட்டுள்ளது. சுரங்கத்தின் ஈரத்தன்மையை ஆய்வு செய்ததில், 15 - 20 நாட்களுக்கு முன், வங்கதேசப் பகுதியில் இருந்து, இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சந்தேகம்:


வங்கதேசத்தில் தயாரிக்கப்பட்ட உடைகள், சிகரெட் அட்டைப் பெட்டிகள், சுரங்கத்தில் கிடந்தன. வங்கதேசத்தில் இருந்து, பயங்கரவாதிகள் ஊடுருவல் அல்லது கால்நடைகள் கடத்தலுக்காக சுரங்கம் அமைக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை