வில்பரிசியில் சிக்கிய தாதாக்களின் தலைவன்!! சுற்றிவளைத்த காவற்துறையினர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
வில்பரிசியில் சிக்கிய தாதாக்களின் தலைவன்!! சுற்றிவளைத்த காவற்துறையினர்!!

பரிசைச் சுற்றி உள்ள பகுதிகளில் இயங்கி வந்த, பெரும் குற்றக்கும்பல் ஒன்றினைச் சேர்ந்த பலர், வில்பரிசியில் (Villeparisis-77) நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினர் மேற்கொண்ட பெரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இந்தக் கைதுகள் நடைபெற்றுள்ளன.
 
 
காவற்துறையினரின் தேடுதல் மற்றும் அதிரடிப்படையான BRI மேற்கொண்ட இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் «le Forain» (காட்சியமைப்பாளன்)  என அழைக்கப்படும்  Marc Hornec, கைது செய்யப்பட்டுள்ளார்.  மொந்ரொய்யில் (Montreuil- 93), உள்ள ஒரு நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பரிசைச் சுற்றி இயங்கும் குற்றக்குழுக்களின் பிதாமகராக (God Father) இருந்துள்ளார்.
 
«மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்கள்» தொடர்பாகப் பரிசின் நீதிமன்றம் வழங்கிய ஆணையின் பேரில், நடாத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக, இந்தச் சுற்றிவளைப்பானது நடாத்தப்பட்டு, முக்கியமான பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இன்று கைது செய்யப்பட்ட Marc Hornec இன் சகேதரர்களான Jean-Claude, Marioஆகியோரும் ஏற்கனவே மோசடி மற்றும் பணம் பறித்தல் குற்றங்களிற்காக நான்காண்டு சிறைத்தண்டனை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை