லா லிகா கால்பந்து பார்சிலோனா அபார வெற்றி

தினகரன்  தினகரன்

பார்சிலோனா: லா லிகா சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணியும், நட்சத்திர அணியான ரியல் மாட்ரிட்டும் அபார வெற்றி பெற்றன.ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி, ஒசாசுனாவை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2 கோல் அடிக்க பார்சிலோனா 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ரியல் மாட்ரிட் 6-2 என்ற கோல் கணக்கில் டிபோர்டிவா லா கொருனாவை வென்றது. இதில், கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட 9 வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் 33 போட்டியில் ரியல் மாட்ரிட் 78 புள்ளிகளும், 34 போட்டியில் பார்சிலோனா 78 புள்ளியும் பெற்றுள்ளன. ரியல் மாட்ரிட்டுக்கு இன்னும் 5 போட்டி உள்ள நிலையில், எந்த அணி கோப்பை வெல்லும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை