தனது ஆசிரியையே காதலித்து திருமணம் செய்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவேல் மக்ரான்

தினகரன்  தினகரன்

பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முன்னிலையில் உள்ள இமானுவேல் மக்ரானின் சுவாரஸ்ய காதல் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இமானுவேல் தனது பள்ளி பருவத்தில் (15 வயது) தனது வகுப்பு ஆசிரியையே காதலித்தார். இமானுவேலின் 30 வயதில் ஆசிரியர் டிராக்னக்ஸை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த போது டிராக்னஸுக்கு 55 வயது. இமானுவேலை திருமணம் செய்த போது டிராக்னுஸுக்கு 3 குழந்தைகள் இருந்தது. இருவருக்கும் 25 வருடங்கள் வித்தியாசம் இருந்தது. டிராக்னஸிசின் மகள் ஒருவர் இமானுவேலுடன் படித்து வந்தார். அப்போது இமானுவேல் டிராக்னஸ் மகளை காதலிப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டனர். ஆனால் 2 வருடங்களுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் டிராக்னசை சந்தித்த இமானுவேல் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது காதலுக்கு டிராக்னஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த சுவாரஸ்யமான காதல் கதை தற்போது வெளியாகியுள்ளது. பிரான்சில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான முதல்சுற்று வாக்குப்பதிவில் சுயேச்சை வேட்பாளர் இமானுவேல் மக்ரான் முன்னிலையில் உள்ளார். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணபட்ட நிலையில் இமானுவேல் மக்ரானுக்கு 24% வாக்குகளும் தேசிய முன்னனிக் கட்சியை சேர்ந்த மரின் லீ பென் 22% வாக்குகளும் கிடைத்துள்ளன. மற்ற முக்கிய கட்சிகள் முன்றாம், நான்காம் இடத்திற்கு தள்ளபட்டன. இந்நிலையில் முதல் சுற்றில் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், 2-வது சுற்றில் மக்ரோனுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் மக்ரோனின் வெற்றி ஏறத்தாழ முடிவாகியுள்ளது.

மூலக்கதை