குல்பூசண் ஜாதவ் மரண தண்டனை எதிர்த்து அவரது தாயார் மேல்முறையீடு

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூசண் ஜாதவின் தண்டனையை எதிர்த்து அவரது தாயார் மேல்முறையீடு செய்துள்ளார். குல்பூசணின் தாயார் அவந்தி கதிர் ஜாதவ் பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அந்த நாட்டின் ராணுவ சட்டத்திற்கு உட்பட்டு மேல்முறையீடு செய்துள்ளார். இந்த தகவலை இந்திய தூதர் கௌதம் பம்பவேலே மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் தெஹ்மினா ஜானுவாவிடம் தெரிவித்துள்ளார். மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களும் பாகிஸ்தான் தெஹ்மினா ஜானுவாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.இதனிடையே குல்பூசண் ஜாதவை சந்திக்க இந்திய தூதருக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், சர்வதேச மனிதாபிமான நடவடிக்கையாகவும் ஜாதவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை  என்று பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. இந்திய கடற்படையின் முன்னாள் வீரரான குல்பூசண் ஜாதவ் பணியில் இருந்து விலகி, ஈரான் சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை