ஜாதவுக்கு தூதரக உதவி இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூசண் ஜாதவுக்கு தூதரக உதவியை வழங்க வேண்டும் என்று இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூசண் ஜாதவ். இவர் ஈரானில் இருந்தபோது, தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்லப்பட்டார். அப்போது இவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம், இவர் உளவு பார்க்க வந்ததாக குற்றம்சாட்டியது. அவர் மீதான வழக்கில், அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஜாதவுக்கு சர்வதேச சட்ட மனிதாபிமான அடிப்படையில் தூதரக உதவி வழங்க கோரும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது. இதற்கிடையே குல்பூசணின் தாய், தனது மகனை விடுவிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தலையிட வேண்டும் என்றும், மகனை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அளித்த மனுவை மத்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்துள்ளது.

மூலக்கதை