பெரும் சிக்கலிற்குள் உள்ளாகும் வார இறுதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
பெரும் சிக்கலிற்குள் உள்ளாகும் வார இறுதி!!

மே முதலாம் திகதிவரை நீடிக்கும் இந்த வார இறுதியானது, பெரும் போக்குவரத்துச் சிக்கல்களைப் பிரான்சில் உருவாக்கும் அபாயம் உள்ளதென எச்சரிக்கப்பட்டுள்ளது. இல்துபிரான்சில் இருந்து சனிக்கிழமை புறப்படும் வாகனங்கள், பெரும் வாகன நெரிசல்களிற்குள் சிக்கும் என்பதால், செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் திங்கட் கிழமை திரும்பும் திசையில் Auvergne-Rhône-Alpes ஆகிய பகுதிகளில் இரந்து வாகன நெரிசல்கள் ஏற்படும் எனவும் Bison Futé இன்று எச்சரித்துள்ளது.
 
 
முக்கியமாக வெள்ளிக்கிழமையில் இருந்தே, இல்-து-பிரான்சிற்குள் நெடுஞ்சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும், வெள்ளிக்கிழமை பெருநகரங்களில் 16h00 மணிக்கும் 20h00 மணிக்கும் இடையிலும், இல்-து-பிரான்சிற்குள் இருந்து 14h00 மணிக்கும் 21h00 மணிக்கும் இடையிலும் புறப்படுவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
சனிக்கிழமை பெருநகரங்களில் இருந்தும் இல்-து-பிரான்சிற்குள் இருந்தும் 9h00 மணிக்கு முதலிலும், அல்லது 16h00 மணிக்குப் பிறகும் புறப்படுவது சிறந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

மூலக்கதை