வெ.இண்டீசுடன் முதல் டெஸ்ட் : பாகிஸ்தான் அபார வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெ.இண்டீசுடன் முதல் டெஸ்ட் : பாகிஸ்தான் அபார வெற்றி

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் இடையே முதல் டெஸ்ட்  கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெ. இண்டீஸ் 286  ரன்னில் ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான்  407 ரன் குவித்தது.

அதிகபட்சமாக மிஸ்பா உல் ஹக் ஆட்டம் இழக்காமல் 99 ரன் விளாசினார். 121 ரன் பின்தங்கிய  நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெ. இண்டீஸ் 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழந்து 93 ரன் எடுத்திருந்தது.

கடைசி நாளான நேற்று 152 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

பாக்.

தரப்பில் யாஷிர் ஷா 6, முகமது அப்பாஸ் 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 32 ரன் இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 3 விக்கெட் இழந்து 36 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   கேப்டன் மிஸ்பா அடுத்தடுத்து சிக்சர் அடித்து (12 ரன், 3 பந்து) அணியை வெற்றி பெற வைத்தார்.

யாஷிர்ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என பாக்.

முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.

.

மூலக்கதை