70 நாட்களில் எல்லாம் முடிந்தது... நடந்தது என்ன?

தினமலர்  தினமலர்
70 நாட்களில் எல்லாம் முடிந்தது... நடந்தது என்ன?

சென்னை: பிப்.,15ல் அ.தி.மு.க., துணைப்பொதுச்செயலராக தனது புதிய அரசியல் அத்தியாயத்தை துவங்கிய தினகரன் , ஏப்.,25ல் கைது செய்யப்பட்டதன் மூலம், சரியாக 70 நாட்களுக்குள் அதற்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.

கடந்து வந்த பாதை:



2017, பிப்., 15: அ.தி.மு.க., துணைப்பொதுச்செயலராக சசிகலாவால் நியமனம்

பிப்., 16: எடப்பாடி தமிழக முதல்வராக தேர்வு; முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார் தினகரன்

மார்ச் 15: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு

மார்ச் 22: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

மார்ச் 23: தொப்பியுடன் அ.தி.மு.க., அம்மா அணியாக ஆர்.கே.நகரில் களமிறங்கினார்.

ஏப்.,7: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி., ரெய்டு

ஏப்., 10: பணப்பட்டுவாடா புகார் எதிரொலி; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து

ஏப்.,17: ரூ.1.30 கோடியுடன் சுகேஷ் டில்லியில் கைது; தினகரன் மீது வழக்கு பதிவு

ஏப்.,18: தினகரனை அ.தி.மு.க.,விலிருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவிப்பு

ஏப்.,19: கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிகொள்வதாக தினகரன் அறிவிப்பு

ஏப்.,19: வீட்டிற்கு வந்து தினகரனுக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் தந்தனர் டில்லி போலீசார்

ஏப்.,22: டில்லி போலீசாரிடம் நேரில் ஆஜர். 7 மணி நேரம் விசாரணை. சுகேஷ் யாரென தெரியாது என்றார்.

ஏப்.,23: 2வது நாளாக ஆஜர். 9 மணி நேரம் விசாரணை.

ஏப்.,24: 3வது நாளாக ஆஜர். 13 மணி நேரம் விசாரணை. ஒற்றை வரியில் பதில்.

ஏப்., 25: 4வது நாளாக ஆஜர். 7 மணி நேரம் விசாரணை. ஆதாரங்களை அடுக்கினர் டில்லி போலீசார். ஒப்புக்கொண்டார் தினகரன் . நள்ளிரவில் கைது.

அதிகபட்ச சிறை தண்டனை:



தேர்தல் கமிஷனுக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினகரன், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமினில் வெளிவர முடியாத 4 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் தினகரனுக்கு சிறை தண்டனை உறுதியாக கிடைப்பதுடன், அதிகபட்ச சிறைதண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை