தினகரனை சென்னை, பெங்களூர், கொச்சி அழைத்துச் சென்று விசாரிக்கிறது டெல்லி போலீஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தினகரனை சென்னை, பெங்களூர், கொச்சி அழைத்துச் சென்று விசாரிக்கிறது டெல்லி போலீஸ்

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கைதான டி.டி.வி. தினகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 நாட்கள் காவல் கேட்ட நிலையில், 4 நாட்களாக வழங்கி உத்தரவிட்டுள்ளது, கோர்ட். இதையடுத்து மீண்டும் தினகரனிடம் துருவி, துருவி விசாரணை நடத்த உள்ளது டெல்லி நீதிமன்றம்.

கைதுக்கு முன்பாக தொடர்ச்சியாக 4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. விசாரணை நடத்தப்பட்ட நேரத்தை கூட்டிப் பார்த்தால் சுமார் 35 மணிநேரங்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அடுத்த நான்கு நாட்களும், தினகரனை பெங்களூர், சென்னை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தினகரன் லஞ்சம் கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் பெங்களூரை சேர்ந்தவராகும். மேலும் இந்த வழக்கோடு தொடர்புடைய இடங்கள் என்பதால் கொச்சி மற்றும் சென்னைக்கு தினகரனை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மூலக்கதை