நடுவருடன் வாக்குவாதத்தால் அபராதம் ரோகித் சர்மாவுக்கு ஹர்பஜன் ஆதரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடுவருடன் வாக்குவாதத்தால் அபராதம் ரோகித் சர்மாவுக்கு ஹர்பஜன் ஆதரவு

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் மும்பை-புனே அணிகள் மோதின. ஜெயதேவ் உனத்காட் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தை அடிக்க மும்பை கேப்டன் ரோகித் சர்மா ‘ஆப்’ திசையில் நகர தயாரானார்.

அந்த பந்தை ஜெயதேவ் உனத்காட் ‘கைடு லைனுக்கு’ வெளியே வீசினார். இதனை ‘வைடு’ என அறிவிக்காததால் அதிருப்தியடைந்த ரோகித் சர்மா நடுவர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


 இந்த போட்டியில் 161 ரன் இலக்கை துரத்திய மும்பை 157 ரன் மட்டுமே எடுத்து, நூலிழையில் தோல்வியடைந்தது.

இதனிடையே நடுவருடன் வாக்குவாதம் செய்து விதிமுறைகளை மீறியதற்காக ரோகித் சர்மாவுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை அணியின் ஆப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘பந்து மிகவும் வெளியே சென்றது. ரோகித் சர்மாவின் ஒரு கால் மட்டுமே நகர்ந்தது.

என்னை பொறுத்தவரை அது ‘வைடு’ பந்தாகதான் இருக்க வேண்டும். ரோகித் சர்மா ஒழுங்கீனமாக நடந்து கொள்ளவில்லை.

விதிகளை தெளிவுபடுத்தி கொள்ள மட்டுமே விரும்பினார். நடுவரிடம் அவர் சப்தம் எழுப்பவில்லை.

அந்த பந்தை ‘வைடு’ என ஏன் அறிவிக்கவில்லை என்று மட்டுமே கேட்டார்’ என்றார்.


.

மூலக்கதை