தொழிலாளர்களுக்கு புதிய ஏற்பாடு : பி.எப்பில் இருந்து வீட்டுக்கடன் செலுத்தலாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொழிலாளர்களுக்கு புதிய ஏற்பாடு : பி.எப்பில் இருந்து வீட்டுக்கடன் செலுத்தலாம்

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து சந்தாதாரர்கள், வீடு கட்டுகட்டுவதற்கும், தவணை தொகை செலுத்தும் வகையிலும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி. எப்) தொடர்பாக மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

இந்நிலையில், பி. எப் பணத்தில் இருந்து வீடு கட்டுவதற்கும், தவணை தொகை செலுத்தும் வகையில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அரசு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பிஎப் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் பயன் அடைவார்கள்.
 
இதுகுறிது பிஎப் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: புதிதாக வீடுகட்டுவதற்கு பிஎப் சந்தாதாரர்கள் தங்களுடைய  கணக்கில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக்கொள்ளலாம். தவணை தொகையை பிஎப்பில் இருந்தே செலுத்தலாம்.

குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் சேர்ந்து கூட்டுறவு சங்கம் அல்லது ஹவுசிங் சொசைட்டி அமைத்து இடம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்கலாம்.

இதற்காக 90 சதவீத பணம் எடுத்தது போக, மாதாந்திர பிஎப் பணத்தில் இருந்தே தவணை தொகையையும் செலுத்தலாம்.

ஆனால், இந்த பணம் நேரடியாக அரசு, ஹவுசிங் ஏஜென்சி, கடன் வழங்கும் நிறுவனம், வங்கி போன்றவற்றுக்கு வழங்கப்படும். பிஎப் சந்தாதாரர் கையில் தரப்பட மாட்டாது.

பிஎப் பணத்தில் வீடு கட்டுவதற்காக பணம் பெற்ற ஊழியர்களுக்கு வீடு கட்டவில்லை என்றாலோ, மனை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றாலோ 15 நாட்களுக்குள் அந்த தொகை மீண்டும் பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

.

மூலக்கதை