ஓபிஎஸ் கோஷ்டி கொடுத்த நெருக்கடியால் நீக்கப்பட்டதா சசிகலா பேனர்? - வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓபிஎஸ் கோஷ்டி கொடுத்த நெருக்கடியால் நீக்கப்பட்டதா சசிகலா பேனர்?  வீடியோ

சென்னை: சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதையடுத்து பன்னீர்செல்வம் வகித்து வந்த முதல்வர் பதவிக்கும் அவர் ஆசைப்பட்டதால். அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா அணி,பன்னீர்செல்வம் அணி என இரு கோஷ்டிகளாகச் செயல்பட்டு வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித்துவிட்டுச் சென்றார். ஆனால், தினகரன் தேர்தல் கமிஷனுக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கில் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அணிகளின் முன்னணி தலைவர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் இரு அணிகளும் இணைவதில் சுணக்கம் ஏற்பட்டது.

ஒபிஎஸ் கோஷ்டி தரப்பிலிருந்து ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை, சசிகலா மற்றும் குடும்பத்தினரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவது என இரண்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் சசிகலாவின் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

மூலக்கதை