பரியேறும் பெருமாள் டைட்டீலில் பெரிய சஸ்பென்ஸ் உள்ளது: கதிர்

தினமலர்  தினமலர்
பரியேறும் பெருமாள் டைட்டீலில் பெரிய சஸ்பென்ஸ் உள்ளது: கதிர்

சிகை, சத்ரு, விக்ரம் வேதா படங்களைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் படத்திற்காக நெல்லையில் முகாமிட்டிருக்கிறார் கிருமி கதிர். இந்த படத்திற்காக ஓரளவு நெல்லை தமிழ் பேச பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்து வருவதாக கூறும் கதிர், இந்த படத்தில் தான் 3 கெட்டப்பில் நடித்து வருவதாக சொல்கிறார். இந்த படத்தை கபாலி டைரக்டர் ரஞ்சித் தயாரித்து வருகிறார்.

அதுகுறித்து கதிர் மேலும் கூறுகையில், இந்த படத்தின் கதைப்படி நான் ஒரே கேரக்டரில்தான் நடிக்கிறேன். ஆனால் அதில் மூன்று விதமான கெட்டப் சேஞ்ச் இருக்கிறது. அதோடு, நெல்லை தமிழ் படத்தில் இருந்தாலும் முழுக்க முழுக்க இருக்காது. பொதுவான தமிழும் இருக்கும். காரணம், கல்லூரி சம்பந்தப்பட்ட கதை என்பதால் வெளியூர்களில் இருந்து வந்தும் படிப்பார்கள். அதனால் நெல்லை மண்வாசனை கதை என்றும் சொல்ல முடியாது. கல்லூரி, பள்ளி என கமர்சியலுக்கும் உண்டான எல்லா விசயங்களும் இந்த படத்தில் உள்ளது. இதில் என்னுடன் கயல் ஆனந்தி, யோகிபாபு, மாரிமுத்து, கபாலி லிங்கேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

முன்பெல்லாம் திருநெல்வேலி கதைகளில் அருவா கம்பு எடுப்பார்கள். ஆனால் இப்போது அது குறைந்து விட்டது. ஆனால் அந்த டச் இல்லாமல் திருநெல்வேலி கதையை எடுக்க முடியாதே. அதனால் எல்லா விசயங்களும் இந்த படத்தில் இருக்கும். மேலும், இந்த படத்தின் டைட்டீல் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் என்பதோடு அந்த பிஏபிஎல்க்கு மேலே ஒரு கோடு இருக்கும். இந்த டைட்டீலுக்குள் ஒரு பெரிய சஸ்பென்ஸ் உள்ளது. அது என்னவென்பது படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புரியும்.

மேலும், கயல் ஆனந்தி நல்ல கம்பர்டபுளா நடிக்கிறார். அதோடு, டைரக்டர், கேமராமேன் என அனைவருமே ஒரே ஏஜ்குரூப் என்பதால் ஜாலியாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் கிருமி கதிர்.

மூலக்கதை