வில்லத்தனத்தை காமெடியாக செய்யும்போது நேயர்களுக்கு வெறுப்பு வராது - உசைன்

தினமலர்  தினமலர்
வில்லத்தனத்தை காமெடியாக செய்யும்போது நேயர்களுக்கு வெறுப்பு வராது  உசைன்

கொடூரமான வில்லன் வேடமாக இருந்தாலும், வில்லத்தனத்தை காமெடியாக செய்யும்போது நேயர்களுக்கு வில்லன் மீது வெறுப்பு வராது என்கிறார் சின்னத்திரை நடிகர் உசைன். அவர் மேலும் கூறுகையில், பானுப்பிரியா நடித்த வாழ்க்கை சீரியலில் அவரது தம்பியாக நடித்த நான், அதன்பிறகு ருக்கு ருக்குமணியில் ஊர்வசியின் தம்பியாகவும், அபிராமியில் கெளதமியின் தம்பியாகவும் நடித்தேன். அதன்பிறகு ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்த நான் ராமானுஜர் தொடரில் கைலாசம் என்ற நெகடீவ் ரோலில் நடித்தேன். ஈகோ பிரச்சினையால் ராமானுஜரையே கொலை செய்ய துடிக்கும் வேடம் அது.

ஆனபோதும், கதைப்படி அந்த கேரக்டர் காமெடியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதனால் எல்லா சீரியல்களிலும் வில்லன்களை வெறுக்கும் நேயர்கள் எனது நடிப்பை ரசித்தனர். அந்த சீரியல் எனக்கு ரொம்ப நல்ல பெயர் வாங்கித்தந்தது. முக்கியமாக, வில்லத்தனத்தை காமெடியாக செய்யும்போது ஆடியன்சுக்கு வெறுப்பு வராது. மன்னிக்கக்கூடிய கதாபாத்திரமாகி விடும். அதனால்தான் காமெடி கலந்த நெகடீவ் வேடங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்கிறார் நடிகர் உசைன்.

மூலக்கதை