மூன்றே குண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
மூன்றே குண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என எச்சரிக்கை!

 மூன்றே குண்டுகளில் உலகை வட கொரியா அழித்து விடும் என அந்நாட்டுக்கு வக்காலத்து வாங்கும் அதிகாரப்பூர்வமற்ற தூதர் தெரிவித்துள்ளார்.

 
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஹைட்ரஜன் குண்டை சோதனையிட்டு, அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. 
 
அதனால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்காவும், ஐ.நா சபையும் விதித்துள்ளன. ஆனால், இவை எதற்கும் அந்நாடு அஞ்சுவதாக தெரியவில்லை.
 
இந்நிலையில், மூன்றே குண்டுகளில் உலகை வட கொரியா அழித்து விடும் என அந்நாட்டுக்கு வக்காலத்து வாங்கும் அதிகாரப்பூர்வமற்ற தூதர் தெரிவித்துள்ளார்.
 
வடகொரியாவுக்காக மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உறவு வைத்திருப்பவர் என தனக்கு தானே முடி சூடிக் கொண்ட, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்ஜென்ரோ பெனோஸ் என்ற சமூக ஆர்வலர், அதிகாரப்பூர்வமற்ற சிறப்பு தூதராக அறியப்படுகிறார்.
 
அர்ஜென்டினாவை சேர்ந்த இணையதள செய்தி நிறுவனமான இன்ஃபோபே-வுக்கு, அல்ஜென்ரோ பெனோஸ், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் அளித்த பேட்டியில், வடகொரியாவை யாரும் நெருங்க முடியாது. அவ்வாறு நெருங்க முயன்றால் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு வடகொரிய மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வர். வடகொரியாவால் மூன்றே குண்டுகளில் உலகையே அழித்துவிட முடியும். அவர்களிடம் அணு ஆயுதங்கள் மற்றும் ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பலான கார்ல் வின்சனை, ஏவுகணை வீசி அழித்து விடுவோம். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அணு ஆயுத போரை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு, அந்நாடு அண்மையில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த நிலையில், அல்ஜென்ரோ பெனோஸின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வடகொரியாவின் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை