தீபாவளிக்கு புதிய திட்டங்கள்; தீட்டுகிறது எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்

தினமலர்  தினமலர்
தீபாவளிக்கு புதிய திட்டங்கள்; தீட்டுகிறது எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்

புதுடில்லி : தென் கொரி­யா­வைச் சேர்ந்த, எல்.ஜி., எலக்ட்­ரா­னிக்ஸ் நிறு­வ­னம், நுகர்­வோர் சாத­னங்­கள் உற்­பத்தி மற்­றும் விற்­ப­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின் மொபைல் போன்­கள், வாடிக்­கை­யா­ள­ரி­டம் அதிக வர­வேற்பை பெற­வில்லை. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னம், வாடிக்­கை­யா­ளர் வாங்­கும் வகை­யில், ஸ்மார்ட் போன்­களை அறி­மு­கம் செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:எங்­கள் நிறு­வ­னத்­தின், வாஷிங் மிஷின், ‘ஏசி’ சாத­னங்­கள் விற்­பனை சிறப்­பாக உள்­ளது. அதே போல், இந்­திய மொபைல் சந்­தை­யி­லும், எல்.ஜி., முக்­கி­யத்­து­வம் பெற திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, வாடிக்­கை­யா­ளர்­கள் விரும்­பும் வகை­யில், குறைந்த விலை­யில், அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­களை உள்­ள­டக்­கிய ஸ்மார்ட் போன்­கள் அறி­மு­கம் செய்­யப்­படும். தீபா­வளி பண்­டி­கையை மைய­மாக வைத்து, போன்­கள் விற்­பனை துவங்­கும். தற்­போது, நொய்­டா­வில் உள்ள தொழிற்­சா­லை­யில், மொபைல் போன்­கள் உற்­பத்தி நடை­பெற்று வரு­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை