கொச்சின் ஷிப்யார்டு, பிரதாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ்; புதிய பங்கு வெளியீடுகளுக்கு ‘செபி’ அனுமதி

தினமலர்  தினமலர்
கொச்சின் ஷிப்யார்டு, பிரதாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ்; புதிய பங்கு வெளியீடுகளுக்கு ‘செபி’ அனுமதி

புதுடில்லி : கொச்­சின் ஷிப்­யார்டு, பிர­தாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ் நெட்­வொர்க்ஸ் ஆகிய மூன்று நிறு­வ­னங்­கள், புதிய பங்­கு­களை வெளி­யிட்டு, மொத்­தம், 2,300 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்ளன. இந்த பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ அனு­மதி அளித்­துள்­ளது.
பொதுத் துறை­யைச் சேர்ந்த, கொச்­சின் ஷிப்­யார்டு, இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய கப்­பல் கட்­டும் நிறு­வ­ன­மா­கும். இந்­நி­று­வ­னம், பங்கு விற்­பனை மூலம், 1,400 கோடி – 1,500 கோடி ரூபாய் திரட்டி, புதிய உலர் கூடம், சர்­வ­தேச கப்­பல் பழுது பார்ப்பு மையம் ஆகி­ய­வற்றை அமைக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
பிர­தாப் ஸ்நாக்ஸ், ‘யெல்லோ டைமண்டு’ என்ற பிராண்­டில், நொறுக்­குத் தீனி வகை­களை விற்­பனை செய்­கிறது. இந்­நி­று­வ­னம், பங்கு விற்­ப­னை­யில், 400 கோடி ரூபாய் திரட்டி, அதன் தொழிற்­சா­லையை நவீ­ன­மாக்­க­வும், பழைய கடன்­களை திரும்­பத் தர­வும் திட்­ட­மிட்டு உள்­ளது. இணைய ஒருங்­கி­ணைப்பு வச­திக்­கான கண்­ணா­டி­யிழை கம்­பி­கள், சாத­னங்­கள் உள்­ளிட்­ட­வற்றை தயா­ரிக்­கும் தேஜாஸ் நெட்­வொர்க்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்­டும் என, தெரி­கிறது.

மூலக்கதை