சர்வதேச உணவு கண்காட்சி: மத்திய அரசு நடத்த முடிவு

தினமலர்  தினமலர்
சர்வதேச உணவு கண்காட்சி: மத்திய அரசு நடத்த முடிவு

புது­டில்லி : உண­வுத் துறையை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு, அமைப்பு சார்ந்த நிறு­வ­னங்­கள் பங்­கேற்­கும், சர்­வ­தேச உணவு கண்­காட்­சியை நடத்த உள்­ளது.
இந்­தி­யா­வில், உணவு பதப்­ப­டுத்­தும் தொழில் துறைக்கு, அதி­க­ள­வில் சந்தை வாய்ப்பு உள்­ளது. 2010 – 11ல், உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், அன்­னிய நிறு­வ­னங்­கள், 576 கோடி டாலர் முத­லீடு செய்­தி­ருந்­தன. இது, 2016 – 17ல், ஏப்., – டிச., நிலவரப்படி, 66.32 கோடி டால­ராக உள்­ளது. மத்­திய அரசு, இணை­ய­தள வணி­கம், உணவு உற்­பத்தி ஆலை­கள் அமைத்­தல், விளம்­ப­ரம் செய்­தல் உள்­ளிட்ட துறை­யில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீடு செய்­வ­தற்கு, கடந்த ஆண்­டில் அனு­மதி அளித்­தது. தற்­போது, சர்­வ­தேச உணவு கண்­காட்­சியை நடத்த, அரசு முடிவு செய்­துள்­ளது.
இது குறித்து, மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் கூறி­ய­தா­வது: இந்­திய விவ­சா­யி­கள் மற்­றும் உண­வுத் துறையை ஊக்­கு­விக்க, சர்­வ­தேச உணவு கண்­காட்சி, வரும் நவம்­ப­ரில், மூன்று நாட்­கள் நடக்­கிறது. அதில், உண­வுத் துறை­யில் ஈடு­பட்­டுள்ள உள்­நாடு மற்­றும் வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் பங்­கேற்­கும். அதன் மூலம், அந்த துறை­யில், சர்­வ­தேச தொழில்­நுட்ப அறிவை, இந்­திய விவ­சா­யி­கள், உற்­பத்­தி­யா­ளர்­கள் பெறு­வர். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை