ஜி.எஸ்.டி.,யால் சிறிய கார் விலை உயரும்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி.,யால் சிறிய கார் விலை உயரும்

புதுடில்லி : அம­லுக்கு வர உள்ள, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி­யால், சிறிய மற்­றும் நடுத்­தர வகை கார்­கள் விலை உய­ரும். பல்­வேறு பொருட்­க­ளுக்கு ஏற்ப, 1, 12, 18 மற்­றும் 28 சத­வீ­தம் என, நான்கு வகை­யாக, சரக்கு மற்­றும் சேவை வரி பிரிக்­கப்­பட்டு உள்­ளது.
தற்­போது, சிறிய கார்­க­ளுக்கு, மத்­திய விற்­பனை வரி, 12.5 சத­வீ­தம் மற்­றும் மாநி­லங்­களின் மதிப்பு கூட்டு வரி, 14.5 – 15 சத­வீ­தம் என்­ற­ள­வில் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. இதன்­படி, ஒரு சிறிய காருக்கு, 27 – 27.5 சத­வீ­தம் வரி விதிக்­கப்­ப­டு­கிறது. ஜி.எஸ்.டி.,யில், சிறிய கார்­கள், 28 சத­வீத வரி­யின் கீழ் வரும் என, தெரி­கிறது. இத­னால், சிறிய கார்­களின் விலை, ஜி.எஸ்.டி.,யில் சிறி­த­ளவு உய­ரும்.
நடுத்­தர வகை­யைச் சேர்ந்த, 1,500 சிசி இன்­ஜின் திற­னுள்ள கார்­க­ளுக்கு, தற்­போது, 24 சத­வீத மத்­திய விற்­பனை வரி­யு­டன், 14.5 சத­வீத, மதிப்பு கூட்டு வரி விதிக்­கப்­ப­டு­கிறது. இவ்­வகை கார்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில், 28 சத­வீத வரி விதிக்­கப்­படும். ஜி.எஸ்.டி.,யை அமல்­ப­டுத்­து­வ­தால், மாநி­லங்­க­ளுக்கு ஏற்­படும் வரு­வாய் இழப்பை ஈடு செய்ய, அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு, புகை­யிலை, பான்­ப­ராக், ஒரு­சில சொகுசு வாக­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, கூடு­த­லாக, 15 சத­வீ­தம் ஆயத் தீர்வை விதிக்­கப்­பட உள்­ளது. இதை­யும் சேர்த்து கணக்­கி­டும் போது, நடுத்­தர வகை கார்­க­ளுக்­கான வரி, தற்­போது உள்­ளதை விட, 4.5 சத­வீ­தம் அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ளது.
பெரிய வகை, எஸ்.யு.வி., கார்­க­ளுக்கு, தற்­போது, விற்­பனை வரி, 27 – 30 சத­வீ­தம்; மதிப்பு கூட்டு வரி, 14.5 சத­வீ­தம் என, மொத்­தம், 41.5 – 44.5 சத­வீத வரி விதிக்­கப்­ப­டு­கிறது.இது, ஜி.எஸ்.டி.,யில், 43 சத­வீ­த­மாக குறைய வாய்ப்பு உள்­ளது.

மூலக்கதை