வேளாண் சந்தையில் தனியாருக்கு அனுமதி; விவசாயி வருவாய் 2 மடங்கு உயர வாய்ப்பு

தினமலர்  தினமலர்
வேளாண் சந்தையில் தனியாருக்கு அனுமதி; விவசாயி வருவாய் 2 மடங்கு உயர வாய்ப்பு

புது­டில்லி : உற்­பத்தி செய்­யும் வேளாண் பொருட்­க­ளுக்கு, விவ­சா­யி­கள், உரிய விலையை பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தில், மொத்த விற்­பனை வேளாண் சந்தையில், தனி­யாரை அனு­ம­திக்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, வேளாண் உற்­பத்தி மற்­றும் கால்­நடை சந்­தைப்­ப­டுத்­து­தல் மாதிரி சட்­டம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது.
விவ­சா­யம், மாநில அர­சு­களின் அதி­கா­ரத்­தின் கீழ் வரு­வ­தால், இந்த சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, அந்­தந்த மாநில அர­சு­களின் பொறுப்­பா­கும். குறைந்­த­பட்­சம், பா.ஜ., ஆளும், 15 மாநி­லங்­களில், மாதிரி சட்­டம் அம­லா­னால், அது, வேளாண் துறை­யில் மிகப்­பெ­ரிய சீர்­தி­ருத்­தத்தை ஏற்­ப­டுத்தி, விவ­சா­யி­கள் வரு­வாய், இரு மடங்கு உயர துணை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தற்­போது, அர­சின், வேளாண் உற்­பத்தி சந்­தைப்­ப­டுத்­து­தல் குழு­வின், கீழ் உள்ள சந்­தை­களில், விவ­சா­யி­கள் தங்­கள் விளை­பொ­ருட்­களை, குறிப்­பிட்ட கட்­ட­ணம் செலுத்தி, நேர­டி­யாக விற்­பனை செய்­யும் வசதி உள்­ளது. நாட்­டில் இது போன்று, 6,746 சந்­தை­கள் மட்­டுமே உள்ளன; அவை ஒவ்­வொன்­றும், குறைந்­த­பட்­சம், 462 கி.மீ., துாரத்­தில் உள்ளன. இந்த நிலையை, புதிய மாதிரி சட்­டம் மாற்­றும்.
நாடு முழு­வ­தும் பர­வ­லாக, மொத்த விற்­பனை வேளாண் சந்­தை­கள் உரு­வாக வழி­வ­குக்­கும். இச்­சந்­தை­களில், விவ­சா­யி­கள், தங்­கள் விளை­பொ­ருட்­கள், கால்­ந­டை­கள் ஆகி­ய­வற்றை நேர­டி­யாக விற்­பனை செய்­ய­லாம். புதிய மாதிரி சட்­டத்­தின் கீழ், வேளாண் பொருட்­கள் விற்­ப­னையை ஒழுங்­குப்­ப­டுத்த, தனி ஆணை­யம் அமைக்­கப்­படும்.
மாநி­லங்­களின் விருப்­பம்புதிய மாதிரி சட்­டத்தை முழு­மை­யா­கவோ அல்­லது பகு­தி­யா­கவோ, தங்­கள் தேவைக்­கேற்ப, மாநி­லங்­கள் அமல்­ப­டுத்­த­லாம். சட்­டத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னை­களும் ஏற்­றுக் கொள்­ளப்­படும்.-ரமேஷ் சந்த், ‘நிடி ஆயோக்’ உறுப்­பி­னர்
நோக்­கம் நிறை­வே­றும்பெரும்­பான்­மை­யான மாநி­லங்­கள், புதிய மாதிரி சட்­டத்தை ஏற்­றுக் கொண்­டுள்ளன. இது, அம­லுக்கு வந்­தால், 2022ல், விவ­சா­யி­கள் வரு­வாயை, இரு மடங்கு உயர்த்த வேண்­டும் என்ற மத்­திய அர­சின் நோக்­கம் நிறை­வே­றும்-ராதா மோகன் சிங், மத்­திய வேளாண் துறை அமைச்­சர்
ஒரே சந்தை‘ஒரே வேளாண் சந்தை’ என்ற நோக்­கத்­தில், மாதிரி சட்­டம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. இது, மாநில வேளாண் சந்­தை­களில், தாரா­ள­ம­ய­மாக்­க­லுக்கு வழி­வ­குக்­கும். ஒரே உரி­மத்­தில், வேளாண் பொருட்­க­ளு­டன், கால்­ந­டை­க­ளை­யும் விற்­பனை செய்­ய­லாம். நாடு முழு­வ­தும், 80 கி.மீ., இடை­வெ­ளி­யில், ஒரு மொத்த விற்­பனை வேளாண் சந்தை அமைய வேண்­டும் என்­பது, அர­சின் இலக்கு. தனி­யார் பங்­க­ளிப்­பால், வேளாண் சந்­தை­களில் ஆரோக்­கி­ய­மான போட்டி உரு­வா­கும். இத­னால், விவ­சா­யி­கள், தங்­கள் வேளாண் பொருட்­க­ளுக்கு, அதி­க­பட்ச விலையை பெற முடி­யும்.-அசோக் தல்­வாய், கூடு­தல் செய­லர், வேளாண் அமைச்­ச­கம்

மூலக்கதை