சிவப்பா இருந்தா குற்றமா? கேத்ரின் தெரசா தடாலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிவப்பா இருந்தா குற்றமா? கேத்ரின் தெரசா தடாலடி

கடம்பன் படத்தில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கோலிவுட்டில் சுழன்று சுழன்று பட புரமோஷனில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார். அவர் கூறியது: நான் கோபக்காரியா என்கிறார்கள்.

சாதாரண பெண்தான். சில சமயம் என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது  அதை சிலர் கோபமாக பார்க்கிறார்கள்.

சிரஞ்சீவி படம் கைதி நம்பர் 150ல் நடிக்க சென்றபோது அங்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் நான் நடிக்காமல் வெளியேறினேன். எதற்காக வெளியேறினீர்கள், யாருடன் சண்டை என்றெல்லாம் கேட்கிறார்கள்.



இதற்கெல்லாம் அப்பட தயாரிப்பு நிறுவனம் என்ன பதில் அளித்தது? அவர்கள் பதில் அளித்தால் அதுபற்றி நானும் பேசத்தயார். தமிழ், தெலுங்கு இருமொழியில் நான் கவனம் செலுத்துகிறேன்.

தற்போதுதான் தமிழ் கற்று வருகிறேன். அதற்காக படப்பிடிப்பு நேரத்தில் பின்னணியில் யாராவது டயலாக்கை எடுத்துச் சொல்ல அதை பேசுவது கிடையாது.

என் வசனத்தை நானே மனப்பாடம் செய்து பேசுகிறேன். தமிழில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன்.

ஏற்கனவே நடித்த மெட்ராஸ் உள்ளிட்ட எல்லா படங்களுமே எனக்கு நல்ல பெயரை பெற்றுதந்திருக்கிறது.

கடம்பன் படத்தில் மலைகிராமத்து பெண் வேடம்.

சிவப்பாக இருக்கிறீர்களே நீங்கள் எப்படி மலைகிராம பெண்ணாக நடித்தீர்கள் என்கிறார்கள். மலைகிராம பெண்கள் யாரும் சிவப்பாக இல்லையா? சிவப்பா இருந்தா குற்றமா? இப்படத்தின் ஹீரோ ஆர்யாகூடத்தான் சிவப்பானவர்.

அவரும் மலைகிராமத்து வாலிபராக நடித்திருக்கிறார்.

இவ்வாறு கேத்ரின் தெரசா கூறினார்.

.

மூலக்கதை