மைக்ரோசாப்ட், சோனி நிறுவனங்களை ஹேக் செய்த 15 வயது சிறுவன்!

PARIS TAMIL  PARIS TAMIL
மைக்ரோசாப்ட், சோனி நிறுவனங்களை ஹேக் செய்த 15 வயது சிறுவன்!

 மைக்ரோசாப்ட், சோனி நிறுவனங்களை அசால்ட்டாக ஹேக் செய்யும் 15 வயது சிறுவனை உலகமே ஆச்சரியமாக பார்த்து வருகிறது.

 
நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட சூழலில் இணையத்தில் புகுந்து ஹேக் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. குறைபாடுகளை களையவும், தகவல்களை திருடவும் ஹேக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் டீன் ஏஜ் நபர்களின் பங்கு பெரிதும் உண்டு.
 
அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆடம் மேட், மைக்ரோசாப்ட், சோனி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சர்வர்களில் நுழைந்து எளிதில் தகவல்களை எடுத்து விடுகிறார். அவர் ஹேக் செய்ய உருவாக்கி இருக்கும் சாப்ட்வேரை, ஏராளமான நிறுவனங்களுக்கும், சைபர் கிரிமினல்களுக்கு விற்றுள்ளார். 
 
அதற்காக அவர் பெற்றுக் கொண்ட தொகை வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே. அவருடைய சாப்ட்வேர் மூலம் 1.7 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன.
 
அதனால் பிரபல நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளன. தனது பணம் முக்கியமில்லை என்றும், பெயர், புகழ் தான் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் பயின்ற கல்லூரி சர்வரை ஹேக் செய்து, கணக்கிட முடியாத அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 
ஆடம் மேட்டின் சாப்ட்வேரில் 1,12,000 பேர் பதிவு செய்து, 6,66,000 ஐ.பி அட்ரசில் இருந்து ஹேக் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஆடம் மேட் மீது வழக்குகள் தொடரப்பட்டு, அதற்காக மன்னிப்பும், அபராதமும் செலுத்தியுள்ளார்.
 

மூலக்கதை