இன்று முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய விதிமுறை!

PARIS TAMIL  PARIS TAMIL
இன்று முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய விதிமுறை!

 பிரித்தானியாவின் நெடுஞ்சாலையில் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதத் தொகை அதிகமாக்கப்பட்டுள்ளது.

 
பிரித்தானியாவில் தற்போது வாகனங்களில் விதிமுறைகள் மீறுபவர்களுக்கு சராசரி அபராதத் தொகை £100 யூரோவாக உள்ளது.
 
ஆனால் இன்று(ஏப்ரல் 24ம் திகதி) முதல் நெடுஞ்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதத் தொகை அதிகமாக்கப்பட்டுள்ளது.
 
முதலில் £100 யூரோவாக இருந்த அபராதத் தொகை தற்போது £1,000 யூரோவாக அதிகமாக்கப்பட்டுள்ளது.
 
அதன் படி அப்புதிய விதிமுறைகள் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது Band A, Band B மற்றும் Band C என உள்ளது.
 
உதாரணமாக குறிப்பிட்ட சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் 20 என்றால், அதைத் தாண்டி 21-30 வரை சென்றால் 3 புள்ளிகள் அளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
 
அதுவே 31-40 ஆக அதிகரித்தால் 7 முதல் 28 நாட்கள் வாகனங்கள் ஓட்ட முடியாது அல்லது 4 முதல் 6 புள்ளிகள் அளிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
 
இதையும் தாண்டி 41 ஆக அதிகரித்தால் 7 முதல் 56 நாட்கள் வாகனங்கள் ஓட்ட தடை அல்லது 6 புள்ளிகள் கொடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை