கழிப்பறையினால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
கழிப்பறையினால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ்!

 யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் கழிப்பறை சரியில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக பயணி ஒருவர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
விமானத்தில் உள்ள இருக்கைகளை விட, அதிகப்படியான பயணிகளிடம் டிக்கெட்கள் முன்பதிவு பெறப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. அதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. 
 
தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி, நெவார்க்-மும்பை செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் கழிப்பறை வசதி சரியில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
எகானமி வகுப்பில் பயணம் செய்த 100 பயணிகளுக்கு, 2 கழிப்பறைகள் மட்டுமே இருந்ததாகவும், மற்றவை பூட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதன் காரணமாக டாய்லட் செல்வதற்கு நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க நேர்ந்தது. 
 
நெவார்க்-மும்பை விமானம் சுமார் 14 மணி நேரம் தொடர் பயணம் செல்லக் கூடியது. அவர்களுக்கு முழு சாப்பாடு, ஸ்நாக்ஸ், மதுபானங்கள் உள்ளிட்டவை விமானத்தில் வழங்கப்பட்டுள்ளன. 
 
அதனால் ஏராளமானோர் டாய்லட் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை