ஆபத்தில் வாழும் பிரித்தானிய மக்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
ஆபத்தில் வாழும் பிரித்தானிய மக்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

 பிரித்தானியாவில் 40 மில்லியன் மக்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் அதிகளவிலான மாசுக்கள் நிறைந்த பகுதிகளில் வாழ்வதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

 
பிரித்தானிய தொழிலாளர் துறை சமீபத்தில் நடத்திய ஆய்வில், நகரங்களில் வாழும் 59 சதவீத மக்கள் நைட்ரோஜன் டயாக்சைட் கலந்த மாசுக்களின் நடுவே வாழ்வதாக தெரியவந்துள்ளது.
 
அதாவது டீசல் எரிவாயு மூலம் வெளிப்படும் மாசுக்கள் பிரித்தானியாவின் 40 மில்லியன் பேரின் உடல் நலத்தை பாதித்து வருவதும் தெரியவந்துள்ளது.
 
பிரித்தானியாவின் Aberdeen, Birmingham, Bournemouth, Burnley, Derby, Chelmsford, Leeds, Northampton, Richmond பகுதிகளில் குறிப்பிட்ட அளவை விட அதிகமான மாசுக்கள் பரவுகிறது.
 
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் மாசுக்களை கட்டுப்படுத்த கடுமையான புதிய வரைவு திட்டத்தை அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தனியார் சுற்றுசூழல் அமைப்பான ClientEarthன் தலைவர் James Thornton, அரசு செயல்படுத்தக்கூடிய புதிய திட்டத்தில் சுத்தமான காற்று மண்டலங்களின் தேசிய மாசுபாடு வெப்ப பகுதிகளில் இருந்து விலக்கும் விடயங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
 
காற்று மாசுபாட்டின் சட்டவிரோத நிலைகள் கொண்ட ஒவ்வொரு நகரங்களிலும் சுத்தமான காற்று 

மூலக்கதை