உடல் எடை குறைக்க அனுஷ்கா புதுவழி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உடல் எடை குறைக்க அனுஷ்கா புதுவழி

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நடிகை அனுஷ்கா 100 கிலோ உடல் எடை கூடினார். படப்பிடிப்பு முடிந்தபிறகு போதிய அளவு உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்பட்டார்.

உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு எதுவும் பலன் தரவில்லை. எந்த நிலையிலும் ஆபரேஷன் செய்து எடையை குறைக்க மாட்டேன் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தீவிர முயற்சிக்கு பிறகும் எதிர்பார்த்தளவுக்கு உடல் எடை குறைக்க முடியாததால் படங்களில் அவரது காட்சிகளை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. உடல் எடை குறைக்க தற்போது புதுமுயற்சி எடுத்திருக்கிறார் அனுஷ்கா.

அதுபயன் அளித்திருக்கிறது.

இதுபற்றி அவரது உதவியாளர் ஒருவர் கூறும்போது, ‘அனுஷ்கா தற்போது உடல் எடை குறைக்க ஆரோக்கியமான மற்றொரு வழியை பின்பற்றுகிறார்.

அது நல்ல பலன் அளித்துள்ளது. சமீபத்தில் அனுஷ்காவை சந்தித்த பிரபாஸ், உடல் எடை குறைத்திருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.

விரைவில் அனுஷ்காவை பழைய தோற்றத்தில் பார்க்கலாம். கவலை வேண்டாம்’ என்றார்.

அனுஷ்கா கடைபிடிக்கும் புதுவழி என்ன என்றபோது, அது சஸ்பென்ஸ் என்றபடி எஸ்ஸானார் உதவியாளர்.

.

மூலக்கதை