ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

வாஷிங்டன்- அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஷ் ஹெச். டபிள்யு. புஷ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒபாமாவுக்கு முன்பு அதிபர் பதவியில் இருந்த ஜார்ஷ்புஷின் தந்தை இவர்.

இதுகுறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஜிம் மெக் கிராத் கூறுகையில், 92 வயதான புஷ் வெள்ளிக்கிழமை முதல் ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருமலால் தூக்கம் பாதிக்கப்பட்ட அவர் பின்னர் நிமோனியா பாதிப்புக்கு உள்ளானார்.

தற்போது சிகிச்சைக்கு பிறகு ஓரளவு உடல் நலம் இயல்புக்கு திரும்பியுள்ளது. இருந்த போதிலும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வருகிறார் என்றார்.

ஏற்கனவே கடந்த ஜனவரியில் இதே போல் உடல் நலம் பாதிக்கப்பட்டு சுமார் 2 வார காலம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 3 மாதத்தில் அவருக்கு 3வது முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவருடன் அவரது மனைவி பார்பரா உடன் இருந்து கவனித்து வருகிறார். அமெரிக்காவில் கடந்த 1989 முதல் 93 வரை புஷ் அதிபராக இருந்தார்.

இவரது காலத்தில்தான் 91ல் வளைகுடா போர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை