வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை மீறினாரா? விளக்கமிளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை மீறினாரா? விளக்கமிளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவு

வடமாகாண ஆளுநர்  ஆட்சித்துறை தலைவராக இருந்து தனது  அதிகாரத்தை மீறினாரா? அல்லது  தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளாhரா என்பதை விளக்கமளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்றைய தினம் உத்தரவிட்டடுள்ளார்.

வடக்குமாகாண ஆளுநர் சட்டத்துக்கு முரணான தீர்மானத்தை எடுத்துள்ளார் என வடக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ஜெகுவால்  கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் யாழ் மேல் நீதிமன்றில்  எழுத்தாணை மணு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மணு நேற்றைய தினம் மன்றில் விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்குறித்த உத்தரவு நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பொதுக்கொள்கைகள் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்மை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் ஒன்றை  பெற்று வடக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ஜெகு  கடந்த 2016 ஆம் சென்றுள்ளார். அதாவது முறையான அனுமதி பெற்று கடந்த 2016 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரதம செயலாளரிடம் இருந்து அனுமதி கிடைத்தது. செப்ரம்பர் மாதம் 30 ஆம் திகதி இவர் வெளிநாட்டுக்கு பயனமாகியுள்ளார்

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதம், இவரை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அவுஸ்ரேலிய அரசின் ஊடாக ஆளுநரின் செயலாளாரால் அறிவிக்கப்பட்டுள்ளது,

இதனால் மேற்குறித்த அதிகாரி, தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அதை விசாரணை செய்யுமாறும் எதிர்மனுதாரர்களாக வடமாகாண ஆளுநர், வடமாகாண ஆளுநரின் செயலாளர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர், வடமாகாண பிரதி பிரதம செயலாளர் (பயிற்சியும் ஆளணியும்) ஆகியோரை குறிப்பிட்டு  எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது

அதாவது குறித்த மனுதாரர் வெளிவாரி வழங்கல் திணைக்களத்தில் இருந்து முறையாக அனுமதி பெறவேண்டும் என்றும் அதை அவர் பெறவில்லை எனவும், இவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அதற்காகவே இவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டார்  எனவும், ஆளுநருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியாது எனவும்  எதிர் மனுதாரர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளான வரதராஜா மற்றும் மேகலா ஆகியோர் மன்றில் தெரிவித்தனர்.

இவ்வாறு மாகாண அரசின்  செயற்பாடுகள்  இனிவரும் காலங்களில் அரச அதிகாரிகளுக்கு கிடைக்கும் புலமைப்பரிசில்களில்  பாதிப்பு செலுத்தும் எனவும் பாதிக்கப்பட்ட நபர் உரிய அனுமதிகளை பெற்று தான் வெளிநாடு சென்றுள்ளார் எனவும் அதற்கான ஆதராங்களை சமர்பிக்க முடியும் எனவும் குறித்த வழக்கு தொடுநர் தரப்பு சட்டத்தரணி  குரபரன் மன்றில் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி  எதிர் மனுதாரர்களின் ஆட்சேபணையை தெரிவிக்க எதிர்வரும் 26 ஆம்திகதி வழக்கை ஒத்திவைத்தார்.

மூலக்கதை