ஆர்.கே.நகரில் 100 பறக்கும் படையினர்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஆர்.கே.நகரில் 100 பறக்கும் படையினர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் பேசிய அவர்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒரு ஷிப்டிற்கு 10 பறக்கும் படை வீதம் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 145 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு பணிக்காக 1694 மத்திய பாதுகாப்பு படையினர் வர உள்ளனர்.

கொடி அணிவகுப்பு இன்றோ, நாளையோ நடத்தப்படும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 4 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தேர்தல் தொடர்பாக பணியாளர்களுக்கு நாளை 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதவரை சிறு சிறு மோதல்கள் மட்டுமே நடந்துள்ளன. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.

இன்று முதல் வாக்காளர் சீட்டு வழங்கும் பணி துவங்கப்படும். ஆள் மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை