பசிலுக்கு எதிரான வழக்கு மே 15இல் விசாரணை

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
பசிலுக்கு எதிரான வழக்கு மே 15இல் விசாரணை

டி. பாருக் தாஜுதீன்

திவிநெகும செயற்றிட்டத்தின் கீழ், கூரைத்தகடுகளை விநியோகிக்கும் போது, 33 மில்லியன் ரூபாய் நிதியைத் தவறாகக் கையாண்டார் என்று குற்றஞ்சாட்டி, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, மே மாதம் 15ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.  

பசில் ராஜபக்ஷ, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாள் நாயகம் ஆர்.ஏ.பீ. ரணவக்க உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கையே, விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (29), தீர்மானித்துள்ளது.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, திவி நெகும பயனாளிகளுக்கு கூரைத் தகடுகளை வழங்கும்போதே, தவறாக நிதியைக் கையாண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.  

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. எனினும், அவ்வழக்கை வேறொரு நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளுமாறு, பசில் ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அவ்வழக்கானது கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. 

மூலக்கதை