தமிழகத்தில் நடப்பது சசி பினாமி ஆட்சியே என 89% பேர் கருத்து - தந்தி டிவி சர்வே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழகத்தில் நடப்பது சசி பினாமி ஆட்சியே என 89% பேர் கருத்து  தந்தி டிவி சர்வே

சென்னை: தமிழகத்தில் நடப்பது சசிகலாவின் பினாமி ஆட்சி என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் சிறையில் இருந்து தமிழக ஆட்சியை சசிகலா இயக்குவதாக 89% மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு சென்றுள்ளார். என்றாலும் கட்சியை சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

ஆட்சியை சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார். அமைச்சர்கள் அவ்வப்போது பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து தந்தி டிவி கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

இன்று தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தப்பட்டது. அதில் திமுக வெற்றி பெற்ற 98 தொகுதிகளில் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 47% பேரும், அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று 44% பேரும் மற்ற கட்சிகளுக்கு 9% பேரும் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். அதே நேரத்தில் சசிகலா ஆதரவு அணியில் உள்ள எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற தொகுதியிலும் ஒபிஎஸ் ஆதரவு அணியில் உள்ள எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற தொகுதியில் இதே கேள்விக்கு அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று 46% பேர் கருத்து .கூறியுள்ளனர். திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 45% பேர் கூறியுள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று 9% பேரும் கருத்து கூறியுள்ளனர்.

தமிழக அரசை சிறையில் இருந்தவாரே சசிகலா இயக்குகிறார் என்று 89% பேர் கருத்து கூறியுள்ளனர். இல்லை என்று 6% பேரும் கருத்து இல்லை என்று 5% பேரும் கூறியுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு ஜெயலலிதா மீதான உங்களின் எண்ணம் மாறியிருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்று 52% பேரும், ஆமாம் என்று 43% பேரும், கருத்து இல்லை என்று 5% பேரும் தெரிவித்துள்ளனர்.

#MakkalYaarPakkam : கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கியவர்களை, சசிகலா சேர்த்துக் கொண்டது...#TNPolitics #AIADMK #Sasikala #MYP #Jayalalithaa pic.twitter.com/xMaBBSYz6T

கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கியவர்களை, சசிகலா சேர்த்துக் கொண்டது கவலைக்குறியது என்று 77% பேர் தெரிவித்துள்ளனர். உட்கட்சி விவகாரம் என்று 16% பேர் கூறியுள்ளனர். கருத்து இல்லை என்று 7% பேர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை