தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நூதன முறையில் கடத்த முயன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நூதன முறையில் கடத்த முயன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

நெல்லை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நூதன முறையில் கடத்த முயன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சொல்வதை தடுக்கும் பொருட்டு புளிய ரையில் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்க ப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை உதவி ஆய்வாளர் குட்டிராஜா தலைமையில் போலீசார் பிரபாகரன், அலெக்ஸ்,சேக் ரபீக்,ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனை செய்த போது ஆலங்குளம் நெட்டூர் பகுதியை சார்ந்த சுபாஷ் ஜேசுதாஸ் பொன்ராஜ் என்பவர் ஓட்டிவந்த மினி லாரியை நிறுத்தி நடத்திய சோதனையில் நூதனமாக மினி லாரியில் தனி அரை அமைத்து 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 மூட்டை புகையிலை பொருட்களை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மினி லாரி மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஓட்டுனர் சுபாஷ் ஜேசுதாஸ் பொன்ராஜ் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காலையில் நடந்த சோதனையில் இருசக்கர வாகனத்தில் 60 பாக்கட் புகையிலை கொண்டுசென்ற சுரண்டையை சார்ந்த திவான் மைதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை