இங்கிலாந்து பெண்ணுக்கு அவித்த முட்டைக்குள் கிடைத்த வைரக்கல்!

தினகரன்  தினகரன்

லண்டன்: இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுகொண்டிருந்தபோது நறுக்கென்று கல் போன்ற ஒரு பொருள் அவர் பல்லில் சிக்கியது.என்னவென்று சுத்தம் செய்து பார்த்த பொழுது பட்டை தீட்டப்பட்ட குபிக் சிர்கோனியா என்ற ஒரு வகை வைரக்கல் என்பது தெரியவந்தது. தனக்கு கிடைத்த வைரம் குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள பலதரப்பிலிருந்தும் முட்டைக்குள் வைரக்கல் எப்படி சிக்கியிருக்கலாம் என்பதற்கான விளக்கங்கள் அளித்தனர். கோழி அந்தக் கல்லை விழுங்கியிருக்கலாம். பின்னர் அந்தக் கல், செரிமாணம் ஆகாமல் முட்டைக்குள் சிக்கியிருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொள்ளப்போகும் தாசனுக்கு வைரக்கல் கிடைத்திருப்பதால் மிகுந்த .மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை