நாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை

சென்னை: பொதுமக்களின் குறைத்தீர்க்க உடனுக்குடன் தீர்ப்பதற்காக முதல் முறையாக இந்தியாவிலேயே எங்கும் இல்லாத நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் 108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடப்பட்டது. அதை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார்.

அந்த அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து மாஃபா பாண்டியராஜன் தெரிவித்ததாவது, 108 அம்சங்களில் 3 அம்சங்கள் பொதுவானதாகும். அவற்றில் ஒன்று ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இரண்டாவது, போயஸ் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும். மூன்றாவது, அதிமுகவையும், இரட்டை இலையையும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மீட்பது ஆகும்.

இதை தவிர்த்து மீதமுள்ள 105 அம்சங்கள் ஆர்.கே.நகருக்கானதாகும். அவற்றுள் மிக முக்கியமானது நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் ஆகும். கணினி பொருத்தப்பட்ட வேன்கள் தொகுதிகளில் வரும். அதில் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். பின்னர் அது புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு குறைகள் தீர்க்கப்படும். இந்த திட்டம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை.

மூலக்கதை