ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.96

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு சரிவு  ரூ.64.96

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.64.96-ஆக வர்த்தகமானது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து ரூ.64.91-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை