கூத்தாடிகள் என்று அழைப்பது மகிழ்ச்சியே - ஸ்ரீப்ரியா

தினமலர்  தினமலர்
கூத்தாடிகள் என்று அழைப்பது மகிழ்ச்சியே  ஸ்ரீப்ரியா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீப்ரியா. நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஸ்ரீப்ரியா, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார். சமீபகாலமாக டுவிட்டரில் அதிக ஆர்வம் காட்டும் ஸ்ரீப்ரியா, ஜீ தமிழில் சேனலில் நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விமர்சித்து வந்தார். அதையடுத்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

இந்த நிலையில், நடிகர் நடிகைகளை கூத்தாடிகள் என்று சொல்வதற்கு தனது டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார் ஸ்ரீப்ரியா. அதில், நடிகர்களை சிலர் கூத்தாடிகள் என்கிறார்கள். அதனால் எந்த வருத்தமும் இல்லை. காரணம், ஈசனின் இன்னொரு பெயரே கூத்தாடிதான். அதனால் இப்படி சொல்வதுகூட சந்தோசத்தையே கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மூலக்கதை