போலி சாதிச் சான்றிதழ் மூலம் 1,832 பேருக்கு அரசுப் பணி: மத்திய அமைச்சர்

தினமலர்  தினமலர்
போலி சாதிச் சான்றிதழ் மூலம் 1,832 பேருக்கு அரசுப் பணி: மத்திய அமைச்சர்

புதுடில்லி: போலி சாதிச் சான்றிதழ் மூலம் 1,832 பேர் அரசுப் பணிகளில் நியமனம் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங் பார்லி.,யில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்ததாவது: போலியான எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சான்றிதழ்கள் மூலம் 1,832 பேர் அரசுப் பணிகளில் நியமனம் பெற்றுள்ளனர். அதில் 1,200 பேர் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற நிதி சார்ந்த துறைகளில் பணியாற்றுகின்றனர். அதில் 276 பேர் பணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

521 பேர் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மூதமுள்ள 1,035 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை