தாயகத்தில் வேகமாக பரவும் உயிர் கொல்லி வைரஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
தாயகத்தில் வேகமாக பரவும் உயிர் கொல்லி வைரஸ்!

 தாயகத்தில் உயிரை பறிக்கும் ஒருவகை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

 
இதுவரை H1N1 இன்புளூவன்சா வைரஸ் தொற்று காரணமாக 400 நோயாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
எனினும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் தற்போது H1N1 இன்புளூவுன்சா மாத்தளை, தம்புள்ளை மற்றும் கண்டிக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த மாதத்தினுள் மாத்தளை வைத்தியசாலையில் மாத்திரம் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தாயார் என தெரியவந்துள்ளது.
 
இதற்கு மேலதிகமாக மாத்தளை வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை அதிகாரிகள் இருவர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
வடக்கு மற்றும் குறித்த பிரதேச வைத்தியசாலைகளில் குறித்த இன்புளூவன்சா தொற்று தொடர்பில் பரிசோதனை நடத்துவதற்கு வசதிகள் மற்றும் உபகரணங்கள் இல்லை. நோயாளிகளின் இரத்த மாதிரி மற்றும் சளி மாதிரிகளை கொழும்பிற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் காரணமாகவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது சுவாசத்தில் பரவும் நோய் என்பதனால் நோயாளார்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் (Isolation Ward) சிகிச்சை வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த வைத்தியசாலைகளில் இந்த வசதிகள் இல்லை. H1N1 தொற்றில் பாதுகாத்துக் கொள்வதற்கு N19 முகமூடிகள் போதுமான அளவு இல்லை.
 
இவ்வாறான முறையில் நோய் தொற்றினால் எதிர்வரும் நாட்களில் இலங்கைத் தீவு முழுவதும் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை