நவீன ஹைபிரிட் கேமரா பானாசோனிக் நிறுவனம் அறிமுகம்

தினமலர்  தினமலர்
நவீன ஹைபிரிட் கேமரா பானாசோனிக் நிறுவனம் அறிமுகம்

புதுடில்லி : ஜப்­பா­னைச் சேர்ந்த, பானா­சோ­னிக் நிறு­வ­னம், மின்­னணு சாத­னங்­கள் வணி­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், புதிய, ‘லுமிக்ஸ் ஜி.எச்., 5’ என்ற அதி­ந­வீன ஹைபி­ரிட் கேம­ராவை, இந்­தி­யா­வில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் டிஜிட்­டல் இமே­ஜிங் தயா­ரிப்பு பிரி­வின் தலை­வர் கவு­ரவ் காவ்ரி கூறி­ய­தா­வது: நவீன தொழில்­நுட்ப அம்­சங்­க­ளு­டன், ‘லுமிக்ஸ் ஜி.எச்., 5’ கேம­ராவை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளோம். இதன் விலை, 1.43 லட்­சம் ரூபாய். இது, 12 – 60 மி.மீ., லென்ஸ் உடன், 1.88 லட்­சம் ரூபாய்க்கு கிடைக்­கும். இது, மற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு கடும் போட்­டி­யாக அமை­யும் என, எதிர்­பார்க்­கி­றோம்.நிறு­வ­னம், தற்­போது, உயர்­தர கேமரா லென்ஸ் பிரி­வில், 3 சத­வீத சந்தை பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளது. இதை, 2017 – 18ம் நிதி­யாண்­டில், 10 சத­வீ­த­மாக உயர்த்த திட்­ட­மிட்டு உள்­ளோம். கடந்த இரு ஆண்­டு­களில், 5,000 கேமரா லென்­சு­களை விற்­பனை செய்­துள்­ளோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
ஜப்­பா­னைச் சேர்ந்த, நிகான் மற்­றும் கேனான் நிறு­வ­னங்­கள், கேமரா லென்ஸ் பிரி­வில், 90 சத­வீத சந்தை பங்­க­ளிப்பை கொண்­டுள்ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை