‘பெட்ரோல் விற்பனை முழுவதையும் ‘டிஜிட்டல்’ மயமாக்க வேண்டும்’

தினமலர்  தினமலர்
‘பெட்ரோல் விற்பனை முழுவதையும் ‘டிஜிட்டல்’ மயமாக்க வேண்டும்’

புதுடில்லி : ரொக்­கப் புழக்­கத்தை குறைக்க, பெட்­ரோல் விற்­பனை முழு­வ­தை­யும், ‘டிஜிட்­டல்’ மய­மாக்க வேண்­டும் என, மத்­திய நிதித் துறை இணை­­அமைச்­சர் சந்­தோஷ் குமார் தெரி­வித்து உள்­ளார்.
அவர், ராஜ்­ய­ச­பா­வில் கூறி­ய­தா­வது: பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு முன், நாட்­டில், 15.44 லட்­சம் கோடி ரூபாய் உயர் மதிப்பு நோட்­டு­கள் புழக்­கத்­தில் இருந்­தன. அவற்றை திரும்­பப் பெற்று, புதிய ரூபாய் நோட்­டு­கள் புழக்­கத்­தில் விடப்­பட்டு வரு­கின்றன. அதில், நடப்பு, மார்ச், 10 நில­வ­ரப்­படி, 65 சத­வீ­தம் புதிய கரன்­சி­கள் புழக்­கத்­திற்கு வந்­துள்­ள­தாக, எஸ்.பி.ஐ., ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.கூடு­த­லாக புழக்­கத்­திற்கு வரும், 2.5 – 3 லட்­சம் கோடி ரூபாய் சார்ந்த பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, டிஜிட்­டல் முறையை கட்­டா­ய­மாக்­க­லாம்.
பெட்­ரோல் நிலை­யங்­களில், ஆண்­டுக்கு, 4.5 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கு பரி­வர்த்­தனை நடக்­கிறது. அதில், 20 சத­வீ­தத்தை டிஜிட்­டல் முறைக்கு மாற்­றி­னால் கூட, 1 லட்­சம் கோடி ரூபாய் புழக்­கத்தை தடுக்­க­லாம். அத­னால், பெட்­ரோல் நிலை­யங்­க­ளுக்கு ஊக்­கத்­தொகை வழங்கி, அனைத்து பணப் பரி­வர்த்­த­னை­க­ளை­யும், டிஜிட்­டல் முறைக்கு மாற்ற வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை