பங்கு வெளியீட்டு பணிகளில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டு பணிகளில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்

புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ், பொது காப்­பீட்டு வணி­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது. மத்­திய அரசு, நான்கு பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின், பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்ட உள்­ளது. அதன்­படி, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ், விரை­வில் பங்கு வெளி­யிட உள்­ளது. தொடர்ந்து, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ் நிறு­வ­ன­மும், பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்ட உள்­ளது. பங்கு வெளி­யீட்டு பணி­களை மேலாண்மை செய்­யும் நிறு­வ­னங்­களை தேர்வு செய்ய, நியூ இந்­தியா, வங்­கி­க­ளு­டன் பேச்சு நடத்த உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘நிறு­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டிற்­காக மேற்­கொள்ள வேண்­டிய பணி­கள், ஒப்­பந்த நிறு­வ­னங்­கள் மூலம் மேற்­கொள்­ளப்­பட உள்ளன. அதற்­காக, ஏழு நிறு­வ­னங்­களை நிய­மிக்க வாய்ப்­புள்­ளது’ என்­றார்.

மூலக்கதை